Monday 23 October 2017

மகிமைமிக்க திருநீறு

மகிமைமிக்க திருநீறு
சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில்ஒன்றுதான் இந்த திருநீறு. 



சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும்போற்றப்படுகிறது.
இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும்,கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய்அமைவது.
மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள்சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாகஅமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்றநிலையான உண்மையையும் திருநீறு உணர்த்துகின்றது.
திருநீறு பூசிய அடியாரை சிவனாகவே கருதுவது சைவர்கள் இயல்பு,உடம்பெல்லாம் உடம்பெல்லாம் உவர் மண்ணாகிவரும் வண்ணாரைசிவனடியாராக பாவித்து தரையில் விழுந்து வணங்கியர் சேரவேந்தரும், நாயன் மாரில் ஒருவராக போற்றப்படும் சேரமான்பெருமாள் நாயனார்.
மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் புற வேதமாகியதிருநீற்றுக்காகவே உயிரைக் கொடுத்தவர்கள்.
மதுரையின் கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்க்க திருநீற்றின்பெருமையை விளக்கி திருஞான சம்பந்தரும் திருநீற்றின் பெருமையைவிளக்கி பதிகம் பாடியுள்ளார்.
இந்த வகையில்,
“கங்காளன் பூசும் கவசத்திரு நீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்க வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”

என்று தெய்வத் திருமூலரும் திரு நீற்றின் பெருமையைஉணர்த்தியுள்ளார்.
உணர்வுடையார் உணர்க…
“ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு “

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment