Tuesday 3 October 2017

எளிய முறையில் தர்பணம் செய்வது எப்படி ?


நீங்களாகவே மிக எளிமையான முறையில் செய்யலாம். அதற்க்கு உங்களுக்கு தேவையானவை.
1 பெரிய தட்டம், (தாம்பாளம்)
1 டம்ப்ளரில் தண்ணீர்
அரிசி மாவு
காசு 48 coin ஒரு நாளைக்கு மூன்று வீதம் 16 தர்பனத்திற்கு 48
கருப்பு எள்ளு
தரப்பை 4 அங்குலம் அதாவது 4 inch நீளமுள்ள 96 தர்ப்பை ( ஒரு நாளைக்கு 6 வீதம் 16 நாட்களுக்கு 96 தரப்பை)
பூ அல்லது துளசி
மஞ்சள் பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலை.
சந்தானம், குங்குமம், அட்சதை (பூ கிடைக்காதவர்கள் மஞ்சள் கலந்த அரிசி)
எப்படி செய்வது.
*************
முதலில் பிள்ளையாரை வணங்கி அவருக்கு தூப தீபம் காட்டி பின் கிழக்குமுகமாக அமர்ந்துகொண்டு.
தாம்பாளத்தில் (தட்டத்தில்) 6 தர்ப்பையை அதன் நுனிப்பகுதி தெற்கும் வடக்குமாக பார்க்கும் படி வைத்து.
தர்ப்பணம் செய்வது எப்படி
அதன் இரு நுனியிலும் சந்தானம் குங்குமம் வைத்து பின் நடுவிலும் சந்தனம் குங்குமம் வைக்கவும். பின் 3 (coin ) காசுகளை எடுத்து, ஒன்று ஒரு நுனியிலும் மற்றது நடுவிலும் மூன்றாவது மற்ற நுனியிலும் வைத்து பின் பூ அல்லது துளசி அல்லது மஞ்சள் அரிசியை தர்ப்பையின் மூன்று பக்கத்திலும் போட்டு.
இப்போது உங்களின் வலது கையில் அதாவது உள்ளங்கையில் சிறிது பச்சரிசிமாவையும் கருப்பு எல்லையும் எடுத்து கொண்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்,
இப்போது மிகவும் மனம் உருகி உங்களின் விருப்பமான தெய்வத்தை மனதில் மனமுருகவேன்டவும் அப்பாடி வேண்டும் பொது உங்களில் கடவுளின் அருள்வெள்ளம் பரவும்.
கடவுளின் தீட்சண்யம் பரவும், சிலர் அதை உணரமுடியும், சிலரால் உணரமுடியாது. அப்படி உணரமுடியவில்லை என்றாலும் கட்டாயம் அங்கே கடவுளின் தீட்சண்யம் இருக்கும். ஆகவே அப்போது நீங்கள் இவ்வாறு சொல்லவேண்டும்.
எனது தாய் வழி 6 தலைமுறைமூதாதயர்
களையும் தந்தை வழி 6 தலைமுறை மூதாதயர்களையும் நான் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வணங்குகின்றேன், தயவுசெய்து இப்போது அடியேன் வழங்கும் இந்த எள்ளும் அரிசிமாவையும் தண்ணீரையும் ஏற்றுக்கொள்ளுங்கள், அத்துடன் இப்போது ஏற்ப்படும் கடவுளின் தீட்சண்யத்தை பயன்படுத்தி உங்கள் குறைகலனைத்தும் நீங்கி முழுமையான நிறைவுடனும் ஆனந்தத்துடனும் பேரானந்த பரஞ்சோதியில் கலந்திடுங்கள்.
அத்துடன் அடியேனையும் எனது குடும்பத்தையும் எனது அடுத்த தலைமுறையினரையும் ஆசீர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் வணங்குகின்றேன். என்று கூறி.
கையில் உள்ள அரிசி மா , எள்ளு , தண்ணீரை தர்ப்பையில் போட்டுவிட்டு கையை அந்த தட்டத்திலேயே கழுவிவிட்டு, தூபம் (சாம்பிரானிகுச்சி ) காட்டி பின் தீபம் காட்டி விட்டு.
தட்டத்தின் முன் விழுந்து வணங்கி விட்டு தட்டத்தில் உள்ளதை ஆற்றிலோ அல்லாது பூசெடிக்கோ (வீட்டிற்க்கு வெளியே இருக்கும் பூச்செடியிலோ அல்லது மரத்திர்க்கோ ஊற்றவும்.
இது போல் 14 நாட்கள் செய்துவிட்டு 15 வது நாள் வீட்டிலும் பின் சிவன்கொவிளிலும் செய்யவும்.
இது காலை சூர்யோதயத்தின் போது செய்யவேண்டும்.
நீங்கள் அனைவரும் பித்ருக்களின் பரிபூரண ஆசிபெற்று ஐஸ்வரியம் ஆரோக்கியம், ஆனந்தமான உறவுமுறை, பரிபூரணமான தனிமனித ஒழுக்கம், சம்பூர்ண ஜீவன்முக்க்தியும் பெற்று வாழ பேரானந்தப் பெருன்ஜோதியின் அருளால் வாழ்த்துகின்றோம.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment