Saturday, 21 October 2017

அன்பும் ஆச்சாரமும் எது பெரியது ஓரு சிறு கதை

அன்பும் ஆச்சாரமும் எது பெரியது ஓரு சிறு கதைசிவதாத்தா கிராமத்தில் உள்ள மடத்தின் திண்ணையில்அமர்ந்திருந்தார். அருகிலிருந்த குலத்தில் சில சிறுவர்கள் குதித்துவிளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் சுவாமிக்கு அபிசேகம்செய்ய தண்ணீர் எடுக்க வந்த பிராமணன், அந்தக் குழந்தைகளைவிரட்டத் துவங்க. சிவதாத்தா வெகுண்டு எழுந்தார்.
“டேய் மடையா, யாரை விரட்டுகின்றாய்”
“என்ன சித்தரே!, குழந்தைகளை விரட்டினால் கோபம் வருகிறதோ!.சுவாமிக்கு அபிசேகம் செய்ய கலங்கிய நீரை எடுத்துச் செல்லமுடியுமோ. ஆச்சாரம் என்னாவது.”
“மடயனே, அன்பை விடவும் ஆச்சாரம் ஒன்றும் பெரியதல்ல.”
“யார் அப்படியெல்லாம் சொன்னது”
“அந்த ஈசனே சொல்லியிருக்கிறான். கேள்,.”
“திருநீலநக்க நாயனார் தம்பதியர் சிவபெருமான் மீது அபரிமிதமானபக்தி கொண்டவர்கள். நாயனாரின் மனைவி பெருமானைத் தம்குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். இருவரும் தினமும்ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பின்தான் தமது அன்றாடவேலைகளைச் செய்வார்கள்.”
“ஒருநாள் பெருமானை தரிசிக்கச் சென்றார்கள். அது சமயம்சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்திப்பூச்சி விழுந்துவிட்டது.அதைக்கண்ட நாயனார் மனைவியின் தாயுள்ளம் பதறியது.லிங்கத்தின்அருகில் சென்று, வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார்.இதைக்கண்ட நாயனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது.”
“பெருமானின் மீது பட்ட சிலந்திப் பூச்சியை கையால் அகற்றாமல்எச்சில் படுமாறு வாயால் ஊதி அகற்றியது எத்தனை பெரியஅபச்சாரம்? ஏன் இப்படிச்செய்தாய்? என கோபத்துடன் கேட்டார்.ஸ்வாமி! வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன்.”
“எம்பெருமானின் திருமேனியில் விழுந்த சிலந்திப் பூச்சியைக் கையால்அகற்ற முயன்றால் அது ஆங்காங்கே ஓடும். அப்போது அதுபெருமானின் மேனியில் எரிச்சலை ஏற்படுத்தும். சிலந்தியின் விஷம்மிகக்கொடியது. விஷம்பட்ட இடமெல்லாம் கொப்பளங்கள்வந்துவிடும். அதனால்தான் வாயினால் ஊதி அகற்றினேன்.
எச்சில்பட்டால் ஒன்றும் தவறு கிடையாது, என்றார் மனைவி. “
“மனைவியின் பதில் அவரைச் சமாதானப்படுத்தவில்லை. என்னதான்இருந்தாலும் அவள் பெருமான் மீது எச்சில்பட வாயால் ஊதியதுதவறுதான். இதுமன்னிக்க முடியாத பெரும் தவறு.வேண்டுமென்றுதான் வாயால் ஊதினேன் என்று எத்தனை துணிவாகக் கூறுகிறாள்?இனி இவளை மனைவியாக ஏற்கக்கூடாது என்று எண்ணி, அவளைக்கோயிலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.”
“இறைவன் விட்டவழி என்று எண்ணியபடி நாயனாரின் மனைவிகோயில் மண்டபத்திலேயே புடவைத் தலைப்பை கீழே விரித்துக்கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நாயனாரின்கனவில் பெருமான் தோன்றி, திருநீலா! என்னைப் பார். என்மேனியைப் பார் என்றார். ஆண்டாண்டு காலம் தவம்செய்திருந்தாலும் காண இயலாத ஈஸ்வரனின் திருமேனி எங்கும்கொப்புளங்கள் படிந்திருந்தன.”
“நாயனார் துடித்தார். ஐயனே! இது என்ன கொப்புளங்கள்? என்றுபதற்றத்துடன் கேட்டார். சிலந்திப்பூச்சி என்னைக் கடித்ததால்உண்டான கொப்புளங்கள். இங்கே பார்! உன் மனைவி வாயால்எச்சில்பட ஊதிய இடம் எல்லாம் கொப்புளங்கள் மறைந்திருப்பதைப்பார். தனது எச்சிலால் எனக்கு மருந்திட்ட அன்னையை நீதண்டித்துவிட்டாய்! சிலந்தி கொட்டியதால் என் உடலில் மட்டும்தான்எரிச்சல்.”
“ஆனால், ஆசாரம் என்று கூறி ஒரு உத்தமித் தாயின் அன்பை புரிந்துகொள்ளாமல் அவளை வார்த்தையால் கொட்டினாயே! அந்த உன்செயலால் என் உள்ளத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்கமுடியவில்லை, என்று கூறி மறைந்தார். கனவில் ஈசனைக் கண்டநாயனார் துள்ளி எழுந்தார்.”
“எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன்? ஆசாரத்தைவிட அன்பேசிறந்தது, பெரியது என்பதை நான் உணரத்தான் எம்பெருமான்இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் போலும், என்று புலம்பியபடிகோயில் மண்டபத்திற்குச் சென்று அன்புடன் மனைவியைஅழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அன்று முதல் ஆசாரம்பார்க்காமல், ஆசாரத்தை விட்டுவிட்டு அன்பே பெரிதென நினைத்துவாழ்ந்தார்.”
“இப்போது என்னச் செய்யப் போகிறாய் ” என்று கேளியாகப்பார்த்தார் சிவதாத்தா.
“மன்னித்துவிடுங்கள் சித்தரே, ஆச்சாரத்தை மட்டுமே பெரிதாகஎண்ணியே அன்பை மறந்துவிட்டேன்” என்று சிவதாத்தாவிடம்மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வேறு இடத்தில் தண்ணீரை எடுக்கச்சென்றார் அந்த பிராமணன்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment