Friday, 27 October 2017

இதயமே இல்லாதவர், சிவதாத்தா கதைகள்


இதயமே இல்லாதவர், சிவதாத்தா கதைகள்
அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவதாத்தாவும்அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர்களுக்காக, என்சிவன் எடுக்கும் அவதாரம்.



கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது.மலையிலிருந்து இறங்கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படிகிராமத்திற்குள் நுழைந்தார். உழைத்து உழைத்தே உறுதியான உடல்,எட்டடிக்கு முன்னால் வருகின்றவரையே அளந்துவிடும் பார்வை,முகத்தை மறைத்துநிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறுபுன்னகை. இதுதான் சிவதாத்தா.
சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமானதோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லைகாவல்தெய்வமான அவன் அனுமதியின்றி கிரமத்திற்குள் யாரும்நுழைய முடியாது. சிவதாத்தா அவனை வணங்கிவிட்டு, சாம்பலைஎடுத்துப் பூசினார்.
இனி இந்த கிராமத்தில் தான் வேலை என மனதுக்குள்சொல்லிக்கொண்டு, அருகில் யாரேனும் தென்படுகின்றார்களா எனபார்வையை செலுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபரமனைக் கண்டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்துவைக்களானார். அவருடைய வருகையை கவணித்த பரமன், அவரிடம்ஓடினான்.
“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல்லிமலையில்இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.
“ஐயா ஆடுகள் மேய்கிறதே, அவைகளை விட்டுவிட்டு எப்படி வருவது”
“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வாஎன்னுடன் ” என்று சொல்ல, பரமனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.அவன் சிவதாத்தாவை முதலாளியிடம் கூட்டிச் சென்றான்.
கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்றவந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவரைமக்கள் தடுத்தனர்.
“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள்செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவேநான் வந்துள்ளேன். ” என்றார் சிவதாத்தா.
“சித்தரே, அவனுக்கு இதயமே இல்லை. அவனைக் காப்பாற்றிஎங்களுக்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என்றார் கூட்டத்திலிருந்த ஒருமுதியவர்.
“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்துவிட்டான்.அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன்.நோயுற்றிருப்பது ஒரு உயிர் என்பதை மறந்து, நீங்களும் பாவத்தினைசேர்த்துக் கொள்ளாதார்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும்அமைதியாக வழிவிட்டார்கள்.
முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம்முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில்புரியவில்லை. கொல்லிமலையிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடனே,அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்களைப்பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய்கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்துகாப்பாற்ற வேண்டும் ” என மன்றாடினாள்.
“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமைஉன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்தனைதுன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுகலிருந்தேகிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளியின் அறைக்குசென்றார்.
“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாகஇருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீநடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள்.அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின்றாய்!”
முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு,அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம்பலாக போயிருக்கவேண்டியவன். இனிப் போகப் போகிறவன். வாழும் குறைந்தநாட்களிலாவது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லிவெளியேறினார்.
திருநீர் அணிவதன் தத்துவம்
இந்த உடல் எபபோது வேண்டுமானாலும் சாம்பலாகலாம். உயிர்வாழும் காலத்திலாவது மற்ற உயிர்களுக்கு இன்பம் தர வேண்டும் எனநினைக்கவே உடலெங்கும் சாம்பலை அணிகின்றார்கள் சைவர்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment