Monday, 23 October 2017

கிரகங்களின் சந்திரன் சந்திராஷ்டம நட்சத்திரம்

முன்னுரை: சந்திரனின் முக்கியத்துவம்:
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்களைத் தொடங்கலாம், எந்த கால கட்டங்களைத் தவிர்க்கவேண்டும் போன்றவற்றையும் தெரிந்து கொள்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை,சந்திராஷ்டமம்.



ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்கினமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கின்றோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடைத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில். இதில் இருந்து சந்திரனின்முக்கியத்து வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும்நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடு கின்றோம். சந்திரன்இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்கின்றோம்.சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கின்றோம். சந்திரன் இருக்கும் ராசிப்படித்ஹான் கோச்சாரபலன்களைப் பார்க்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோவில்களில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கின்றோம்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள்,அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் "சந்திராஷ்டமம்" ஒன்று.

சந்திராஷ்டமம்:

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கின்றோம். சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம காலம்' ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த சத்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

ஆகையால், இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேஷம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால், சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சிலமாற்றங்கள் உண்டாகின்றன. எதிர் மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் சந்திரன் மனோகாரகன். மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துக்களிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சந்திரன் ஜெனனஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் (6,8,12)இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம்,ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தினால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சந்திரன் இருக்கும் இடம்:

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளைக் கடந்து விடும். இப்படிக் கடக்கும் பொழுது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகின்றது. அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?

சந்திரன் நாம் பிறந்த ராசியில்
(1)-இல் இருக்கும்பொழுது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும்,ஞாபக மறதி உண்டாகலாம்.
2- இல் இருக்கும் பொழுது: பணவரவுக்கு வாய்ப்புண்டு, பேச்சில் நளினம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.
3- இல் இருக்கும் பொழுது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு,அவசிய செலவுகள்.
4- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய் வழி ஆதரவு.
5- இல் இருக்கும் பொழுது: ஆன்மீக பயன்கள், தெய்வபக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம், தாய் மாமன் ஆதரவு.
6- இல் இருக்கும் பொழுது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன், வீண் விரயங்கள், மறதி, நஷ்டங்கள்.
7- இல் இருக்கும் பொழுது: காதல் நலிந்கங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள்,குதூகலம், பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
8- இல் இருக்கும் பொழுது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்றுசொல்லுகின்றோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளுதல், கோவிலுக்கு சென்று வருதல் நல்லது.
9- இல் இருக்கும் பொழுது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
10- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு,அலைச்சல், உடல் உபாதைகள்.
11- இல் இருக்கும் பொழுது: தொட்டது துலங்கும், பொருள்சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.
12- இல் இருக்கும் பொழுது: வீண் வியங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்து கொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் நட்சச்சத்திரத்திற்கு 17-வதுநட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும்.உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பதுநலம் தரும்.



பிறந்த நட்சத்திரம்
சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி
அணுஷம்

பரணி
கேட்டை

கிருத்திகை
மூலம்

ரோகினி
பூராடம்

மிருகசீரிஷம்
உத்திராடம்

திருவாதிரை
திருவோணம்

புனர்பூசம்
அவிட்டம்

பூசம்
சதயம்

ஆயில்யம்
பூரட்டாதி

மகம்
உத்திரட்டாதி

பூரம்
ரேவதி

உத்திரம்
அஸ்வினி

அஸ்தம்
பரணி

சித்திரை
கிருத்திகை

சுவாதி
ரோகினி

விசாகம்
மிருகசீரிஷம்

அணுஷம்
திருவாதிரை

கேட்டை
புனர்பூசம்

மூலம்
பூசம்

பூராடம்
ஆயில்யம்

உத்திராடம்
மகம்

திருவோணம்
பூரம்

அவிட்டம்
உத்திரம்

சதயம்
அஸ்தம்

பூரட்டாதி
சித்திரை

உத்திரட்டாதி
சுவாதி

ரேவதி
விசாகம்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment