ஜாதக பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? -
1. ஜாதக பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
✳ ஜாதக பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.
✳ குரு நிச்சிதம், தெய்வ நிச்சிதம் மற்றும் கர்ப்ப நிச்சிதம் மூலம் திருமணம் செய்யலாம்.
2. செவ்வாய் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
✳ தோஷத்தை நீக்க முடியாது ஆனால் தோஷத்தினால் ஏற்படும் வினையின் வீரியத்தை பரிகாரம் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.
✳ செவ்வாய்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் ஆகியவற்றில் முருகனை செவ்வரளி கொண்டு வணங்கி வருவதால் தோஷத்தினால் ஏற்படும் வினையின் வீரியத்தை குறைக்கலாம்.
3. முக்கியமான பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்யலாமா?
✳ பத்து பொருத்தங்களின் பொருத்தம் அவசியம் அற்றது.
✳ பாவக ரீதியான பொருத்தங்கள் இருந்தால் போதுமானது.
4. குலதெய்வ கடவுள் தெரியாதவர்கள் என்ன செய்வது?
✳ அகிலத்திற்கு தாயான அம்பாளை வணங்குவது உத்தமம்.
✳ அமைதியின் வடிவமான அம்பாளின் அவதாரங்களை வணங்குவது சுபிட்சம் மற்றும் சேமத்தைத் தரும்.
5. ருத்ராட்சம் அணிவதற்கு கட்டுபாடு உள்ளதா?
✳ ருத்ராட்சம் அணிவதற்கு கட்டுப்பாடு உள்ளது.
✳ இறந்த வீட்டிற்கு செல்லும் போதும், பெண்கள் பூப்பெய்திய வீட்டிற்கு செல்லும் போதும், குழந்தை பிறந்த தீட்டுகளின் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.
6. மாலையில் வீட்டில் விளக்கை ஏற்றிய பின்பு வீட்டை பூட்டி விட்டு செல்லலாமா?
✳ மாலையில் வீட்டில் விளக்கை ஏற்றிய பின்பு வீட்டை பூட்டிவிட்டு செல்லக்கூடாது.
✳ ஏனெனில் விளக்கை ஏற்றியவுடன் வீட்டிற்கு தெய்வங்கள் வருவார்கள்.
✳ ஆகவே அந்நேரங்களில் வீட்டை பூட்டிவிட்டு செல்லக்கூடாது.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment