ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில் அமர்ந்தால் நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.
கடக லக்கினத்திற்கு
2 ம் வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு பூர்விக அமைப்புகளில் இருந்து நல்ல வருமானம் பெரும் அமைப்பை தடையின்றி கொடுக்கும் , ஜாதகருக்கு வாக்கு பலிதம் ஏற்ப்படும், அரசு துறைகளில் பணியாற்றும் வய்ய்பினை ஜாதகர் பெறுவார். 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் , வாக்கு என்ற அமைப்பில் .
4 ம் வீட துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் களத்திர வழியிலும் கூட்டு அமைப்பிலும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்,100 சதவிகித தீமையான பலனையே தரும்.
5 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து என்ற அமைப்பில் திடீர் இழப்பு என்ற வகையில்.
7 ம் வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும் திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே.
8 ம் வீடு கும்பத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , நீடித்த அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் மற்றும் இருதார அமைப்பு , வங்கியில் அதிக சேமிப்பு வெளிநாடுகளில் இருந்து அதிக வருவாய் என்ற அமைப்பில் ,
12 ம் வீடு மிதுனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன் சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில்
சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் சுப விரயம் , மனநிம்மதி , நல்ல தூக்கம் என்ற அமைப்பில்
சிம்ம லக்கினத்திற்கு
2 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் சூரியனுடன் சேராமல் இருக்கும் புதன் என்றால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம் அற்ற நிலை , எதிரிகள் தொந்தரவு , நோய் நொடி , கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும் தொல்லை மற்றவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்ப்படும் துன்பம், என்ற அமைப்பில் தீமையான பலனே நடக்கும்.
சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்திருக்கும் புதன் எனில் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் முதலீடுகளால் லாபம், கடன் பெறுவதாலும் , கடன் கொடுப்பதாலும்அதிக நன்மை , வட்டி தொழில் நல்ல முன்னேற்றம் , எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஜாதகர் விளங்குவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் எல்லாம் வெற்றி என்ற நிலையே ஜாதகருக்கு தரும்.
4 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால் ஜாதகர் நல்ல குணமும் , செயல்பாடுகளும் கொண்டவராக காணப்படுவார் , தாய் வழியில் அதிக நன்மை பெரும் தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் , நல்ல வசதியான வீடு , சொகுசான வண்டி வாகனம் சொத்து சுகம் அனைத்தும் ஜாதகருக்கு தீடிர் என கிடைக்கும் இந்த அமைப்பு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.
5 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையானபலனையே தரும் பூர்வீகத்தில் செய்யும் தொழில்களில் வெற்றி , குழந்தை பாக்கியம், பரம்பரை சொத்து அதிக வருமானம், விரைவான முன்னேற்றம் , பல தொழில் நிர்வாகிக்கும் தன்மை, அனைவரிடமும் நல்ல பெயர் , அதிகார பதவி என்ற அமைப்பில்.
7 ம் வீடு கும்ப ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில், மேலும் மனைவி வழி சொத்துகள் ஜாதருக்கு அதிகம் கிடைக்கும் திருமண வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் நபர்கள் இவர்களே.
8 ம் வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் ஆயுள் , ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை, மன நிலை பாதிப்பு, திடீர் இழப்பு , வாகன விபத்து செய்தொழில் முடக்கம் என்ற அமைப்பில்,
12 ம் வீடு கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர் பிறை சந்திரன் என்றால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும் , கடும் கோபத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படும் , மன நிம்மதி என்பது ஜாதகருக்கு கிடைப்பது அரிது , தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் மூக்கை நுழைத்து மன நிம்மதி இழக்கும் சூழ்நிலை ஜாதகருக்கு ஏற்ப்படும் இதுவே ஜாதகருக்கு முதல் ஜென்மம் இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
தேய்பிறை சந்திரன் என்றால் ஜாதகர் மிகுந்த பாக்கியசாலி, மறு ஜென்மம் கிடையாது இதுவே கடைசி ஜென்மம் , சமுதாயத்திற்கு சிறந்த சேவைகளை செய்யும் தன்மை , மக்கள் செல்வாக்கு இதனால் அதிக வருமானம் , நல்ல நிம்மதியான தூக்கம், சிறு வயதிலேயே ஞானம் கிடைக்க பெறுபவர்கள் , சிறந்த அரசியல் தலைவர்கள் , ஆன்மீக வாதிகள் , மத தலைவர்கள் மத குருமார்கள் என்று எப்பொழுதும் மக்களிடம் அதிக தொடர்புகளை கொண்டவர்கள் அனைவரும் இவர்களே. இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.
கன்னி லக்கினத்திற்கு
2 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனம், குடும்பம் , வாக்கு , களத்திரம் , கூட்டு தொழில் , நண்பர்கள் மக்கள் ஆதரவு அற்ற நிலை , முன்னேற்றம் இல்லாத அமைப்பு தன் வாயாலே தானே கெட்டு போகும் நிலை , மற்றவர்களை புரிந்துகொள்ளும் தன்மை அற்ற நிலை என இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
4 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் வாழ்கை என்பதே போராட்டமாக மாறிவிடும் , வசிப்பதற்கு நல்ல இருப்பிடம் அமையாது , நல்ல வீடு வண்டி வாகன யோகம் அமையாது , சொத்து சுக அமைப்பில் அதிக தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி வரும் , இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
5 ம் வீடு மகர ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வசிப்பது அதிக நலம் தரும் , இல்லை எனில் ஜாதகருக்கு ஜீவனம் என்பதே அமைய வாய்ப்பு இல்லை , முன்னேற்றம் என்பது சிறிதேனும் கூட ஏற்ப்பட வாய்ப்பு இல்லை, அனைத்தும் தாமதமாக அமையும், ஆண்வாரிசு கிடைப்பது மிக அரிதான ஒன்றாகும் , உதவி செய்ய யாரும் வரமாட்டார்கள். இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
7 ம் வீடு மீன ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மனைவி வழியில் அதிக துன்பம் அனுபவிக்க வேண்டி வரும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசாக திருமண வாழ்க்கை அமைந்து விடும் , மன நோயால் ஜாதகர் அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உண்டு, கூட்டாளிகளிடம் , நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிவரும் திடீர் என அவர்களே பரம வைரியாக மாறிவிடும் அபாயம் ஏற்ப்படும். இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
8 ம் வீடு மேஷ ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லை எனில் அதிக துன்பம் ஜாதகரை வாட்டி வதைக்கும் , வெப்ப நோய்களால் அதிகம் துன்ப பட வேண்டி வரும் அல்லது திடீர் இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகர் முன் பின் யோசிக்காமல் செய்யும் அனைத்து காரியங்களும் கெடுதலையே தரும், ஆக இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும்.
12 ம் வீடு சிம்ம ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகர் மிகசிறந்த முன்னேற்றங்களை பெறுவார், வெளிநாடுகளில் இருந்து செல்வ வளம் , அதிக முதலீடு செய்வதால் லாபம் , சகல துறைகளிலும் முன்னேற்றம் , இன்சுரன்ஸ் துறைகளில் அதிக லாபம் , அரசு துறைகளில் அதிக லாபம், ஒப்பந்த தொழில்களில் நல்ல முன்னேற்றம் அதிக வருமானம் என இந்த அமைப்பு ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் நடப்பு திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள் 2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .
மேலும் இது 2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் .
பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை .
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
விருச்சிக லக்னம் லக்னத்தில் கேது உள்ளது.
ReplyDelete