Tuesday, 31 October 2017

சிதம்பர ரகசியம் என்றால் என்ன

சிதம்பர ரகசியம் என்றால் என்ன




சிதம்பர ரகசியம்
பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில்வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் 'பொது தீட்சிதர்கள் .

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும்
21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

சிதம்பர ரகசியம் என்றால் என்ன

புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் ,நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம்சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்


பூபோட்டால், பொன்கிடைக்காது
பொன் போட்டால், பூ கிடைக்காது
இருள்கிருக்கும்போது, வெளிச்சத்தின் மதிப்பு தெரியும்
அஞ்ஞாம் அகலும் போது இறைவன் மதிப்பு தெரியும்

அஞ்ஞானத்திற்கும், மெய்ஞாத்திற்கும் வேறுபாடு எதுவும் இல்லை

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment