Saturday, 7 October 2017

மந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்


( வாழ்க்கையை வளமாக்கும் மந்திர சாதனைகள்.)
ஆலய வழிபாட்டில் மிக, மிக முக்கியத்துவம்
வாய்ந்தது மந்திரங்கள். ஒவ்வொரு
கடவுளுக்கும், ஒவ்வொரு வகையான
மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்களை
தெரிந்து கொண்டு உரிய முறையில் உச்சரித்து
வழிபாடு செய்யும் போது கடவுள் மனம்
மகிழ்ந்து, நமக்குத் தேவையானதை
கொடுப்பார்.
அதை விடுத்து ஆலயத்துக்கு சும்மா
வெறுமனே சென்று சாமி கும்பிட்டு விட்டு
வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
எனவே அவசியம் மந்திரங்களைத் தெரிந்து
கொள்ளுங்கள். சரி... மந்திரம் என்றால் என்ன?
மனம் + திறம் = மந்திரம். மனதுக்கு திடம்
கொடுப்பதுதான் மந்திரம்.
சுவாமிகளின் மூல
மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும்
போது, முதலில் நமது மனது திடப்படும்.
பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை
விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து
செல்லும்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து
கொண்டனர். சரியான மந்திரங்களை உச்சரித்து
பலன் பெற்றனர். மந்திரங்களில் 7 கோடி
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள்
சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம்
இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.
மந்திரங்கள் பல வகைப்படும். பிரணவ
மந்திரம், காயத்ரி மந்திரம், பீஜாட்சர
மந்திரங்கள், அஷ்ட கர்ம மந்திரங்கள்,
வழிபாட்டு மந்திரங்கள் என்று சொல்லிக்
கொண்டே போகலாம்.
சில மந்திரங்களை வீடுகளில் மட்டுமே
உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களை
ஆலயங்களில் தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள
மூர்த்தத்துக்கு ஏற்ப மந்திரங்களை சொன்னால்
நிச்சயம் பலன் தேடி வரும். சில மந்திரங்கள்
காடு மற்றும் குகைக்குள் மட்டுமே ஜெபிக்க
வேண்டும். சில மந்திரங்கள் திருமணம்
ஆனவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆன்மிகத் தகுதி பெறாமல்
மந்திரங்களை சொல்லக்கூடாது.
இறைவனிடம் மனதை சரண் அடையச் செய்த
ஒவ்வொருவரும் மந்திரங்களை ஜெபிக்க
வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108
தடவை சொல்வது மிகவும் நல்லது. ஆலய
பிரகாரங்களில் அமர்ந்து மந்திரங்களை
சொல்லும் போது அது நிச்சயம் பல மடங்கு
பலன்களை அள்ளித்தரும். மந்திரம் என்றதும்
நிறைய பேர் என்னவோ... ஏதோ என நினைத்து
பயந்து விடுகிறார்கள். சிலர் அது நமக்கு
ஒத்து வராது என்று முயற்சி செய்யாமலே
விட்டு விடுகிறார்கள். சிலர் எல்லா
மந்திரங்களும் சமஸ்கிருதத்தில்தானே
இருக்கிறது. அதை உச்சரிக்க தெரியாது என்று
நினைப்பார்கள்.
இப்படியெல்லாம் நினைத்து, மனதைப் போட்டு
குழப்பிக்கொண்டு வீணாக கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் மந்திரங்கள் மிக,
மிக எளிமையானவை. தமிழிலேயே ஏராளமான
மந்திரங்கள், பதிகங்கள், பாடல்கள் உள்ளன. ஓம்
கணபதி நமஹ, ஓம் நமச்சிவாய, ஓம் நமோ
நாராயண, ஓம் சக்தி பராசக்தி, ஸ்ரீராம
ஜெயராம ஜெய ஜெய ராமா என்றெல்லாம்
சொல்வது மிக, மிக எளிமையான மந்திரங்கள்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பது போல குல
தெய்வத்தின் பெயரையும் மந்திரமாக
உச்சரிக்கலாம்.
இந்த மூல மந்திர உச்சரிப்புக்கு இணையான
மகிமை உலகில் வேறு எதுவும் இல்லை.
வாழ்க வளமுடன் என்று சொல்வது கூட
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாக
கருதப்படுகிறது. திருமந்திரம், பெரிய
புராணம், கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம்
ஆகியவற்றில் உள்ள பாடல்கள் சக்தி
வாய்ந்தவை. பன்னிரு திருமுறைகளில் சகல
காரிய சித்தியளிக்கும் மந்திரங்கள் ஏராளமாக
புதைந்து கிடைப்பதை காணலாம். செல்வம்
வேண்டுமா? உடனே திருமணம் நடைபெற
வேண்டுமா? கடன் பிரச்சினை தீர வேண்டுமா?
நோய்கள் தீர வேண்டுமா? ஏழ்மையில் இருந்து
விடுபட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் தமிழ்
வேத மந்திரங்கள் உள்ளன.
காலையில் படுக்கையில் இருந்து எழும்
போதே சிவ... சிவ என்று சொல்லிக் கொண்டே
எழுந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு
பிடித்த சாமி பெயரை சொல்லலாம். தீராத
வியாதிகளால் அவதிப்படுபவர்கள் ஆலய
சன்னதியில் அமர்ந்து திருநீல கண்டப்
பதிகத்தின் முதல் திருமுறையைப் பாட நோய்
பஞ்சாக பறந்து விடும். சிலருக்கு சனிக்கிரக
பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.
அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள்
திருஞானசம்பந்தர் திருநள்ளாறில் பாடிய
பதிகத்தை 108 தடவை பாராயணம் செய்தால்,
பயன் அடையலாம்.
அது போல திருஞான சம்பந்தர்
திருநெடுங்குளம் எனும் தலத்தில் பாடிய
பதிகத்தை பாடினால் எவ்வளவு பெரிய
தடைகளும் உடைபட்டு விலகி ஓடி விடும்.
திருச்சோற்றுத்துறை எனும் தலத்தில்
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். அந்த
பதிகத்தை ஜெபித்தால் வசதியான வாழ்வை
பெற முடியும். அது போல அவர் திருமருகல்
எனும் தலத்தில் பாடிய பதிகத்தை ஆலய
பிரகாரத்தில் அமர்ந்து படித்தால் உடனே
திருமணம் கை கூடி விடும்.
இப்படி நோய்கள்
நீங்கவும், கிரக தோஷங்கள் விலகவும்
பதிகங்களும், மந்திரங்களும் நிறைய உள்ளன.
அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு
ஜெபித்தால் நிச்சயமாக உரிய பலன்கள்
கிடைக்கும். பதிகங்களை படிப்பதால் எப்படி
பலன் கிடைக்கும் என்று சிலருக்கு சந்தேகம்
எழக்கூடும். மந்திரங்கள், பதிகங்களில் உள்ள
ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள்,
நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை
பெற்றுள்ளன. இந்த அதிர்வுகள் ஒலி
சக்திகளாகும். இந்த அதிர்வுகள் ஒன்று சேரும்
போது சக்தி பல மடங்கு அதிகரித்து, நமக்கு
பலனைப் பெற்றுத் தரும்.
நோய் தீர்க்கும் தன்வந்த்ரி ஸ்லோகத்தை 27
தடவை சொன்னால் இத்தகைய பலன்களை
பெற முடியும். ஆதிசங்கரர் சவுந்தர்ய
லஹரியில் கூறியுள்ள ஒரு மந்திரப் பாடலை
பாடினால் எவ்வளவு பெரிய காய்ச்சலும்
உடனே நீங்கி விடும். ஆஞ்சநேயர் சன்னதியில்
வழிபடும்போது ஆஞ்சநேயர் மந்திரத்தை
கூறினால் கொடிய நோய்கள் குணமாகும்.
அது போல அனுமன் கவசத்தை ஜெபித்தால்
சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்பாள்
சன்னதிகளில் வழிபடும்போது, ரோக நிவரண
அஷ்டகத்தை சொல்லலாம்.
மந்திரங்கள், பதிகங்களை படிக்கும் போதோ,
சொல்லும் போதோ வாய் விட்டு சொல்வதை
விட மனதுக்குள் சொல்வது நல்லது. நமது
புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள்,
உபநிடதங்களில் ஏராளமான மந்திரங்கள்
உள்ளன. திருமந்திரம், கந்தர் அணுபூதி,
கந்தகஷ்டி கவசம் போன்றவற்றில் மந்திரங்கள்
மறைந்து கிடக்கின்றன. எனவே மந்திரச்
சொற்கள் நிறைந்த பாடல்களை தெரிந்து
கொண்டு உள்ளம் உருகப்பாடினால்
நிம்மதியான வாழ்வு பெறலாம்.
அதிலும் ஆலயங்களில் பாடல்களை பாடும்
போது நிச்சயம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
சில பதிகங்கள், மந்திரங்களை குறிப்பிட்ட
ஊர்களில் உள்ள ஆலயங்களில் அமர்ந்து
ஜெபிப்பது நல்லது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்ட தலத்தில்,
குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது 100
சதவீதம் பலன் கிடைப்பதை
அனுபவப்பூர்வமாக உணரலாம். சில
மந்திரங்களை ஆலயங்களில் சில செயல்கள்
செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு திருநீறு பூசும் போது ஓம்
சிவாய நம என்று சொல்லிக் கொண்டே பூச
வேண்டும்.
அது போல ஒரு செயலை தொடங்கும் போது
ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம் எனும் மந்திர
வலிமையுள்ள சுலோகங்களை உச்சரித்தால்
நமது நற்காரியங்கள் அனைத்தும் தடை
இல்லாமல் நிறைவேறும். ஸ்ரீ
விஸ்வநாதாஷ்டகம் எனும் 8 சுலோகங்கள்
மந்திர வலிமை பெற்றவை. இந்த
சுலோகங்களை திங்கள் தோறும் சிவபெருமான்
சன்னதியில் நின்று கூறி வழிபட்டால்
வாழ்வில் எதற்கும், எந்த இடையூறும் வராது.
அதிகாலை நேரத்தில் சக்தி தலங்களுக்கு
சென்றால் மறக்காமல் ஆதிசங்கரர் அருளிய
கவுரி சத்கம் பாட வேண்டும்.
இந்த மந்திரம் நிம்மதியான வாழ்வைத்
தேடித்தரும். வசிஷ்ட முனிவர் சிவநாம
மந்திரங்கள் நிறைய எழுதியுள்ளார். அந்த
மந்திரங்களை தினமும் மனதுக்குள் 3 தடவை
சொன்னால் போதும், தரித்திரங்கள் ஓடி
விடும். கந்தபுராணத்தில் வரும் சங்கர
சமஹிதை மந்திரத்தை சிவாலயத்தில்
அமர்ந்து படித்தால் எல்லாவித சுக
போகங்களும் தேடி வரும். அது போல
ஆதிசங்கரர் இயற்றிய ஸாம்ப பரப்பிரம்ம
சுலோகத்தை தினமும் ஆலய பிரகாரங்களில்
அமர்ந்து படித்து வழிபட்டு வந்தால் அஷ்டமா
சித்திகளைப் பெறலாம்.
ப்ருதி வீஸ்வராய ஸ்தோத்திரம் எனும்
மந்திரத்தை சிவாலய கருவறை முன்பு நின்று
உச்சரித்தால் குடும்பத்தில் அமைதி
உண்டாகும். துர்கா தேவி முன்பு நின்று
ஸ்ரீதுர்கா கவசம் பாடினால் கணவன் &
மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த
தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீசுப்பிரமணிய பஞ்சரத்னம் பாடினால்
முருகன் அருள் பெறலாம். ஸ்ரீமகாலட்சுமி
சன்னதி முன்பு நின்று அவருக்குரிய அஷ்டக
மந்திரத்தை கூறினால் நமது பொருளாதார
நிலை உயரும். குங்கும பஞ்சதசி என்றொரு
மந்திரம் உள்ளது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்
இதை சிறப்பாக செய்வார்கள். இந்த
பஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும். இப்படி ஒவ்வொரு சன்னதிலும்
உச்சரிக்க தனி, தனி மந்திரங்கள் உள்ளன.
அருளும் பொருளும் பெற அஷ்டலட்சுமி
ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். சகல
கலைகளிலும் சிறக்க சகலகலா வல்லி மாலை
சொல்ல வேண்டும்.
இத்தகைய மந்திரங்களில் காயத்ரி மந்திரம்
உயர்வானது. இது வேதங்களின் தாய் என்று
போற்றப்படுகிறது. அது போல பிரணவ
மந்திரம் (ஓம்) மிக, மிக சக்தி வாய்ந்தது.
சூரியனில் இருந்து வெளியாகும் ஓசை ஓம்
என்று ஒலிப்பதாக சமீபத்தில் நாசா
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர
மந்திர விஞ்ஞானம்
****************
ஒருவன் “ராமா” என்று பலத்து கத்தினால்
அவனை சுற்றிலும் குறித்த தூரத்தில்
இருப்பவர்கள் அனைவருக்கும் கேட்கிறது.
எப்படி கேட்க முடிகிறது.
கத்தினவனிடத்திலிருந்து கேட்டவர்கள் வரை சப்தம் சென்றிருக்க
வேண்டும். காற்றின் வழியாக சப்தம்
பரவுகின்றன. இங்கு காற்று என்பது வீசும்
காற்றுகள் அல்ல. வாயு மண்டலம் என்று
பொருள். நிலையான வாயு
மண்டலத்திநூடாகவும் சப்தம் பயணிக்கும்.
இதுபோல் சப்தத்திற்கு வடிவமுண்டு,
சப்தத்தினை குறித்த அலைவேகத்தில்
அலைக்கழிக்க வைக்கும் போது குறித்த
உருவங்களை உண்டு பண்ணும் என்பது
தற்போது கணனிகளின் உதவியுடன் புரிந்து
கொள்ளலாம் என நினைக்கிறேன்,
அதுபோல் சப்தத்திற்கு குறித்த நிறத்தினை
உண்டும் பண்ணும் ஆற்றலும் உண்டு.
ஒருவரை மடையா என்று ஏசினால் அவரிற்கு
கோபம் வரும், அதுபோல் சப்தத்தினால்
உணர்சிகளை தூண்ட முடியும்.
சப்தங்களை வாயினாலோ, மனதினாலோ
சொல்லும்போது, நினைக்கும் போது உடலில்
சில மாறுதல்கள் ஏற்படும். இதனை பஞ்சபூத
பீஜ மந்திரங்களினால் பரிசோதித்து
பார்க்கலாம்.
ரம் என்பது அக்னி பீஜம், இதனை ஓரிடத்தில்
அமைதியாக அமர்ந்து “ரம்,ரம்” என்று
தொடர்ச்சியாக ஆயிரத்தெட்டு தடவை
வாய்விட்டு சொல்லுங்கள் உடலில் மெதுவாக
சூடு பரவுவதை காணலாம்.
மனதில் சலனமில்லாமல் சொல்லத்தொடங்க சில
நிமிடங்களில் அதிக சூடு உருவாகுவதை.காணலாம்.
இதற்கு மாறாக “ஸம்” என்ற அப்பு – நீர்
பீஜத்தினை கூறினால் உடலில் குளிர்ச்சி
தன்மை உண்டாகும். இதுபோல் ப்ருதுவி பீஜம்
ஜெபித்தால் இரத்தோட்டம் மந்தப்படும், வாயு
பீஜம் ஜெபித்தால் நாடித்துடிப்பு அதிகரிக்கும்.
இப்படி உடலில் ஏற்படும் மாறுதல்கள்
உடலுடன் நிற்பதில்லை. உடலைச் சுற்றி
உள்ள வாயு மண்டலத்தினையும்
மாற்றுகிறது. உடலில் சூடு பரவும் போது
உடலைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்திலும்
கூடு பரவுவது போல் மனதில் மந்திரங்களால்
உருவாக்கப்படும் சக்தி சுற்றி உள்ள
ஆகாயப்பரப்பில் உள்ள மன ஆகாய வெளியில்
மாறுதலை செய்யும் என்பதனை புரிந்து கொள்ளலாம்.
மனித உடலிலும், மனதிலும் உள்ள சக்திகள்
எல்லாம் வெளியிலிருந்து பெறப்பட்டவையே,
வெளியே சூரியன் இல்லாவிட்டால் உடலில்
பிராணன் இருக்காது, அதனாலேயே அதிக
பிராணன் உள்ள பகலில் வேலை செய்து பிராண
இழப்பினை ஈடு செய்ய இரவில்
உறங்குகிறோம். அதுபோல் சந்திரன்
இல்லாவிடில் மூளையில் திரவ தன்மை
இருக்காது. பிண்டத்தில் உள்ளவை எல்லாம்
அண்டத்தில் இருந்து பெறப்படுபவையே.
மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியை அதிகமாக கவரும் ஆற்றலுடைய சொற்களின்
கோர்வையே, குறித்த அளவு ஒரு மந்திரத்தை
ஜெபிக்கும் போது அதற்குரிய மாறுதல்
ஜெபசாதகரின் உடல், மனம் சுற்றியுள்ள
ஆகாயத்தில் பிரதிபலித்து அதிக சக்தியை
கவர்கின்றது. தெய்வ ஆகர்ஷண மந்திரங்கள்
குறித்த நிற, வடிவங்களை ஆகர்ஷிக்கும்
வகையில் மகான்களால் ஆக்கப்படுள்ளது.
இவைகளின் ஜெபத்தால் அக்குறித்த தெய்வ
உருவம் சூக்ஷ்மத்தில் இருந்து ஸ்தூலதிற்கு
உருவாகிறது. இதற்கு மிகுந்த மனக்குவிப்பு
தேவை. இந்த மனக்குவிப்பு அதிகமாகும்
போது சாதகன் தனது இஷ்ட தெய்வத்தினை
பௌதிக கண்களால் காண்கிறான்.
இதுபோல் காரிய சித்திக்கான மந்திரங்களை
ஜெபிக்கும் போது உண்டாகும் மந்திர அலைகள்
மன ஆகாயத்தில் பரவி காரிய சித்திக்கான
சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றியடையச்
செய்கிறது.
இவையே மந்திரங்கள் எப்படி
செயற்படுகின்றன என்பதற்கான விளக்கங்கள்
ஆகும்.
ஜெப முறை
**********
மந்திரங்களை வாயால் உச்சரித்தே பலன்
காணவேண்டுமானால் அதற்கு பலகாலம்
வேண்டும். சிலசமயம் அவ்வப்போது ஜெபித்த
மந்திரங்களின் பிரபாவம் மற்றொரு ஜெபத்தால்
கலைந்து போகலாம்.
இப்படியானால் எத்தனை
காலம் ஜெபித்தாலும் பலன் பெற முடியாது.
அதனால் மந்திரங்களின் பலன்களை அடைய
வேண்டுமானால் வாய் உச்சரிப்புடன்
மனதிலும் சலனமில்லாமல் உச்சரிக்க பழக
வேண்டும். மனதில் சலனமில்லாமல் உச்சரிக்க
தெரிந்தவர்கள் வாயினால் உச்சரிக்காமலே
மனதினால் உச்சரித்து விரைவில் பலன்
காணலாம். தெய்வ காட்சிகளை காணும்
விருப்பத்திற்கான மந்திரமானால் வாயில்
உச்சரிக்கும் அதே வேளை மனதில் அதன்
அர்த்தத்தினை பாவித்து வரவேண்டும்.
மந்திர தீக்ஷை
*************
பலவித வர்ணங்கள் தாறுமாறாக தீட்டி
இருக்கும் துணியில் சுத்தமானதொரு
சித்திரத்தினை வரைய முடியாது. இதற்கு
முதலில் பழைய வர்ணங்களை அகற்ற
வேண்டும். அது போல மந்திர சக்திகளால்
உருவாகும் புதிய வகை சக்தி அலைகளை
தாங்கி கொள்ள மனதில், உடலில் பக்குவம்
இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவனுக்கு
நன்மைக்கு பதில் தீமையும் கிடைக்கலாம்.
அப்படி விரும்புபவர்கள் தகுந்த
ஒருவரிடமிருந்து அச்சக்தியினை
பெற்றுகொண்டால் பின் பயமின்றி ஜெபித்து
சித்தி பெறலாம். மந்திரத்தினை ஜெபிக்கும்
போது திரண்டு வரும் சக்தியினை தாங்கும்
ஆற்றலைத் தகுந்த ஒருவரிடமிருந்து
பெறுவதுதான் மந்திர தீக்ஷை.
மந்திர தேர்வு
***********
ஏதோ ஒரு பலனை நாடி ஏதோ ஓரு
மந்திரத்தை ஜெபித்தால் பலன் பெற முடியாது.
குறித்த பலனை தரக்கூடிய மந்திரங்களை
அறிந்தே ஜெபிக்க வேண்டும். இப்படிச்
செய்யாததால்தான் பலர் பலகாலம் ஜெபித்தும்
பலன் பெறமுடியாது போயினர்.
மனம் அது செம்மையானல் மந்திரம் ஜெபிக்க வேண்டும். மனம் அது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டும். மனம் அது செம்மையானால் சகலமும் செம்மையாமே என்பது சித்தர் வாக்கு ஆகும்.
அப்படியானால் மனம் செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும். என்பது தான் இதனுடைய அடிப்படையான உட்பொருள் ஆகும். இன்று எல்லா கடைகளிலும் வாழ்கையை வளமாக்கும் மந்திரங்கள் என்று நூற்றுக் கணக்கில் புத்தங்கள் விற்பனையாகிறது.
இதனை வாங்கி படிக்கும் 90 சதவீதம் மக்களுக்கு இதனால் யாதொரு பலனும் கிடைக்கவில்லை என்றும் மேலும் அதிகமாக தெய்வ வழிபாட்டின் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள். சுமார் 10 சதவீதம் மக்கள் மட்டுமே தெய்வ வழிபாட்ழன் மீது அவநம்பிகை கொள்கிறார்கள்.
இதற்கு காரணம்.
1. பூர்வ ஜென்ம புண்ணிய பலன்
2. ஸ்பெ~ல் டெக்னிக் மூலம் பூஜை செய்வாதல் ஏற்பட்ட வெற்றி என்று விவரம் புரிந்த அறிவாளிகள் தெரிந்து
கொள்வார்கள். இந்த ஸ்பெ~ல் டெக்னிக்கின் பெயர் தான் தந்திர சாதனை ஆகும்.
தந்திரம் என்றால் என்ன?
*********************
புல் பூண்டு தாவரங்கள் மீன் திமிங்கலம் சர்ப்பங்கள் ஒரு செல் உயிரினங்கள் முதல் மனிதன் வரையிலும் மற்றும் சு10ரியன் சந்திரன் போன்ற நவ கிரகங்களும் இமயமலை போன்ற பாறைகள் முதல் ஆறு குளம் கடல் வரை உள்ள அண்ட சராசரங்களில் உள்ள சு10ட்சமமான அணுக்கள் வரை எல்லாமே எப்பொழுதும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இதனை பாமர மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை அறிவார்கள். அப்பிடி என்றால் இந்த இயக்கத்திற்கு ஆதாரமான சக்தி அனைத்திலும் இருக்க வேண்டும். அல்லவா அது எது அது தான் பிரம்மம் என்னும் இறை ஆற்றல் ஆகும். இதனை மகா ஞானிகளும் சித்தபுரு~ர்களும் மிகப்பெரிய அறிவு சக்தியாகிய ஆற்றலாக இறைவனாக வணங்கினார்கள்.
அணுவிற்கும் அணுவாக விளங்கும் அந்த மகாசக்தியை அறிய முடியாத காரணத்தால் தான் மனிதர்கள் கவலை துன்பம் நோய்களில் சிக்கி சீக்கிரமாக மரணம் அடைகிறார்கள்.
இந்த பிரபஞ்ச சக்தியை தெரிந்து கொண்டவன் தன்னுடைய சித்தத்தில் உள்ள பாவத்தை நீக்கி இந்த மண்ணுலகிலே இன்ப வாழ்கையை நடத்தி மோட்சம் சேர்கிறான். கல்லிலும் உலோகத்திலும் காற்றிலும் கலந்து உறையும் அந்த மகா உணர்வு சக்தியை விழிப்பித்து செயல்படுத்தி தன்வசப்படுத்தி தனக்கு தகுந்த காரிய சாதனைகளுக்கு பயன்படுத்திக்கொ
ள்ளும் முறைதான் தந்திர சாஸ்திரம் ஆகும். இதனை தெரிந்து கொண்டவர் தான் தாந்ரீக் என்று அழைக்கபடுவார் இந்த தாந்ரீக் தான் அந்த காலத்தில் அரச சபையில் இராஜ குருவாக வணங்கப்பட்டார். இந்த தாந்ரீக தந்திரத்தால் தான் ராஜாவாக பரம்பரை பரம்பரையாக பல நூறு ஆண்டுகள் வம்சாவளியாக நாட்டை ஆண்டார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தகுந்த குருமார்கள் கிடைக்காத வரையில் அவர்கள் செய்யும் பூஜையும் மந்திர உச்சாடனங்களும் பலன் அளிக்காது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் உள் சு10ட்சமம் ஆகும். இதனை முற்றிலும் அறிந்த நமது பழைய திராவிட இன தமிழ் மக்கள் குல தெய்வ வழிபாட்டிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று சொல்வதை விட குல தெய்வத்தை மட்மே வழிபட்டார்கள் என்பது தான் காலத்தால் மறைக்கபட்ட உண்மை ரகசியம் ஆகும்.
வாழ்க்கையை வளமாக்கும்
மந்திரமும் தந்திரமும்:
*******************************************
வாழ்க்கையை வளம் ஆக்கும் மந்திரங்கள் என்று எடுத்து கொண்டால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரங்கள் உள்ளது.
ஆனால் இங்கு இரண்டு மந்திரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வாழ்கையை வளம் சோர்க்கும் தந்திர பிரயோக முறை
1. ஓம் சிவ சிவ ஓம்
2. ஓம் அரி ஓம்
இந்த இரண்டு மந்திரங்களையும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். இவை இரண்டையும் வைத்துக் கொண்டு தந்திர முறைகளை மாற்றி அமைத்து குறைந்த பட்சம் 100 மந்திரங்களை செய்யலாம் மந்திர ஜெபம் மற்றும் உபாசனைகளை செய்ய நாம் சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லா மந்திரங்களுக்கும் சில சாபங்கள் இருக்கும் அவை
1.தேவசாபம்
2.ரி~p சாபம்
3.சித்தர்கள் சாபம் மற்றும் மந்திரத்தை ஜெபிப்பவர்களின் பிதுர்வக்க தோ~ம் மாதுர்வர்க்க தோ~ம் இருக்கும். ஆகவே இவைகளை நீக்கும் வகையில் தான் எந்த ஒரு மந்திரங்களையும் முதலில் குருமுகமாக கேட்டு (குருவிடம் கற்காத கல்வி குருட்டு கல்வியாம்) தெரிந்து உபதேசித்த பின்னர் அவற்றை ஜெபிக்கும் பொழுது மற்றும் உபாசனை செய்யும் பொழுது நமக்கு வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment