ஆன்மீக கேள்வி - பதில்கள் !!!
ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா
● பூஜையறையில் கடவுள் படங் களுக்கு இணையாக அவதார புருஷர் களின் (ராமானுஜர், ஆதிசங்கரர், பாபா, ராகவேந்திரர், ரமணர் போன்றோ ரின்) படங்களை மாட்டக்கூடாது என்கிறார்களே, சரிதானா? மறைந்த மூதாதையரின் படங்களையும் மாட்டக்கூடாது என்கின்றனர். தெளி வான வழிமுறையைக் கூறுவீர்களா?
-என். ராமச்சந்திரன், பெங்களூர்-93.
பூஜையறையில் எல்லா படங்களையும் மாட்டலாம். ஆனால் வரிசைக் கிரமங்கள், திசைகள் கவனிக்கப்பட வேண்டும். முதலில் குலதெய்வ, இஷ்ட தெய்வப் படங்களும் அதன்பின் படிப்படியாக மற்ற தெய்வங் களின் படங்களையும் மாட்ட லாம். சுவாமிப் படங்களை கிழக்கு அல்லது மேற்கு நோக்கி மாட்டலாம். தென்திசையைப் பார்த்தபடி வடதிசைச் சுவர் களில் ஆசார்ய புருஷர்களின் படங்கள் மற்றும் மகான்களின் படங்களை மாட்டலாம். நம் முன்னோர் படங்களைத் தனியாக மாட்டலாம். தெற்கு நோக்கி மட்டும் தீபாராதனை காட்டுவதும், தீபம் ஏற்றுவதும், தரையில் விழுந்து வணங்குவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை முக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு இது பொதுவான தர்மம். என்றாலும் சில விஷயங்களை உங்க ளுக்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. படங் கள் விஷயங்களில் பலருக்குப் பல சந்தேகங்கள் ஏற்படுகிறது. இந்தக் கேள்வியை நான் வெளி நாடு செல்லும்போதுகூட அந்த இடத்தில் என்னிடம் கேட்கிறார்கள். பூஜையறையில் அனுமன் படம் இருக்கலாமா? குழலூதும் கண்ணன் படம் இருக்கலாமா? ராமர் பட்டாபிஷேகப் படம் இருக்கலாமா? பழனி முருகன் படம் இருக்கலாமா- இப்படிப் பலவிதமான கேள்விகள் பலராலும் கேட்கப்படுகின்றன. உங்கள் மனதிற்கு எந்தத் தெய்வம் பிடித்திருக்கிறதோ அந்த தெய்வப் படங் களை தாராளமாக வைக்கலாம்.
அடுத்து சுவாமிப் படங்களுக்கு இணையாக என்று ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள். அதாவது சுவாமிப் படங்களை உயரமாகவும், அவதார புருஷர்களின் படங்களை அதற்குக் கீழும், முன்னோர்களின் படங்களை அதற்கும் கீழே மாட்டலாமா அல்லது எல்லாரையும் ஒரே உயரத்தில் வைக்கலாமா என்பது உங்கள் சந்தேகம். இதற்குப் பொதுவான பதில்- படங்களை எப்படி வைத்தாலும் தவறில்லை என்பதே. உயர இருப்பதால் ஒரு பொருள் உயர்ந்ததாகவோ, கீழே இருப்பதால் ஒரு பொருள் தாழ்ந்த தாகவோ அர்த்தம் ஆகாது. சிலரிடம் ஒவ்வொரு படங்களுக்கும் சிறிது சிறிது பூ வைக்கும் பழக்கம் உள்ளது. அப்படி எல்லாம் அவசியமில்லை. முறையாகச் செய்வதானால் வர்ண கலாபத்தில் செய்வது என்று அந்தக் காலத்தில் எழுதுவார்கள். அதற்குப் பிராண பிரதிஷ்டைகூட உண்டு. அதனால் அதிக சஞ்சலங்கள் அடை யாமல்- வீடு முழுக்க படங்களாக மாட்டி வைக்காமல் தேவையான அளவு மட்டும் படங்களை மாட்டி வைத்துப் பூஜிப்பது சிறந்தது.
● மனிதன் தவிர்த்த மற்ற ஜீவராசிகளுக்கும் கடவுள் பக்தி உண்டா?
-ஆர்.பி. ஜெயச்சந்திரன், பூனாம்பாளையம்.
மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கு இறைபக்தி உண்டா, இல்லையா என்றால், நாம் பூனையாகவோ நாயாகவோ வேறுவகை மிருகமாகவோ இருந்தால் அந்த நிலையை நாம் அறிய முடியும். புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால், எல்லா ஜீவராசிகளும் தன்னை அறியாமல் இறைவனை நோக்கி தங்களுக்குத் தெரிந்த முறையில் வழிபட்டு ஆன்மிகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன என்பதுதான். ஆயிரம் யானைகளுக்குத் தலைவனாக விளங்கிய கஜேந்திரன், கந்தர்வனாகிய முதலையின் வாயில் பிடிபட்டு தன் பலம் இழந்து ஆதிமூலமே என்று அழைத்தபோது, இறைவன் அந்த யானையை ரட்சித்ததாகக் கூறுவார்கள். அப்படி என்றால் ஆபத்து காலத்தில் இறைவனை அழைக்க வேண்டும் என்ற சிந்தனை யானைக்கு இருந்தது என்பதுதானே உண்மை. சிலந்திக்கும் யானைக்கும் எறும்புக் கும் நாரைக்கும் சிவபெருமான் மோட்சம் கொடுக்கவில்லையா? உயிர்களின் நோக்கமே இறைவனைச் சேர வேண்டும் என்பதால், அத்தகைய பக்குவ நிலையை அடைந்த உயிர்களிடத்தில் இறைபக்தி இருக்கும்.
● கும்பாபிஷேகத்தின்போது பருந்துகள் எப்படி வருகின்றன? ஆச்சரியமான விஷயமாய் இருக்கிறதே...
-ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.
கும்பாபிஷேகத்தின்போதும் பெரிய யாகங்களின்போதும் வருவது கிருஷ்ணப் பருந்து என அழைக்கப்படும் கருடன் ஆகும். இந்த கிருஷ்ணப் பருந்தை பார்த்த வுடன் நம்மால் அடையாளம் காண முடியும். ஆலயங்களில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் சொல்லி, அதன்பின் அந்தந்த தேசங்களில் பேசப்படும் மொழிகளில் இறைவனைத் துதித்தபின் விமானத்தில் கும்ப நீரைச் சேர்க்கும் பொழுது, யக்ஷர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வருணன், வாயு, குபேரன், முப்பத்து முக்கோடி தேவர்கள், அனந்தன், கருடன் போன்றவர்கள் சந்தோஷ மடைகிறார்கள். அதன் வெளிப்பாடாக சூரியனின் உக்கிரம் குறைவது, குளிர்ந்த காற்று வீசுவது, மழை பொழிவது, கருட தரிசனம் போன்றவை உண்டாகிறது. ஆனால் இவை அனைத்துமே ஒரே இடத்தில் ஏற்படாவிட்டாலும், இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்படும். இறைவன் அந்த இடத்தில் எழுந்தரு ளுவதால் மேற்சொன்ன தேவர்களின் சந்தோஷத்தின் வெளிப்பாடே இது.
● செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் முதலியவற்றிடமிருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள் வது? எந்த தெய்வத்தை வேண்டுவது? செய்வினையால் ஏற்படும் தீமை வாழ்க்கை முழுவதும் தொடருமா? யார் வைத்தார்களோ அவர்களுக்கு எந்த உபத்திரவமும் வராதா? பாவ காரியம் செய்கிறவர்களுக்குத் தண்டனை கிடையாதா?
-சுசீலா, வி. தானே.
நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட ஒன்றாகும். ஆதிசங்கரர் ஆசார்ய புருஷராகப் பிறந்து இதுபோன்ற வாமாசார பிரயோகத்தை எல்லாம் ஒழித்து விட்டார். எம்பெருமான் ராமானுஜரும் கலியுகத்தில் இதுபோன்ற தொல்லைகளுக்கு எல்லாம் நாராயணனே கண்கண்ட மருந்து என்று சத்தியப் பிரமாண மாக நிரூபித்துக் காட்டிவிட்டார். ஆக, ஆசார்ய புருஷர்கள் பாடுபட்டு இதுபோன்ற பிரயோகங் களை உலகில் இருந்து ஒழித்துள்ளார்கள். பலி கொடுத்து சக்திகளைப் பெறும் தந்திரங் களைக்கூட புத்தர் போன்றவர்கள் அகிம்சை முறையில் ஒழித்தார்கள். கலியுகத்தில் செய்வினை என்பது எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓரிடத்தில் இருக்கலாம். பொதுவாக துர்தேவதைகளை உபாசிப்பவர்கள் நல்ல சக்தியைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள். தங்கள் எண்ணங் களாலேயே- செயல்களாலேயே அவர்கள் அழிவார்கள்.
சூன்யம் என்பது அடுத்தவர்களை உருத்தெரியாமல்- ஒன்றுமில்லாமல் செய்வது. ரிக்வேஷணம் என்பது உயிருக்கு உயிரான இருவரை அல்லது கணவன்- மனைவியைப் பிரிக்கப் பயன்படுத்துவது. வசியம் என்பது எதிராளிகளைத் தங்கள் சாதகத்திற்காக வசம் செய்து கொள்வது. ஸ்தம்பனம் என்பது எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் செய்வது. மாரணம் என்பது முக்கிய மனிதர்களை மரணமடைய வைப்பது. இப்படிப் பலவிதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு பதுமை மூலமாகவோ, ஒருவரின் நகங்கள் அல்லது அவர் பயன்படுத்திய துணி, காலடி மண் ஆகியவற்றைக் கொண்டு பிரயோ கம் செய்வார்கள். பொதுவாக வாமாசார பூஜைகள் மிகக் கடுமையானது. கொஞ்சம் தவறினாலும் அது உபாசிப்பவனையே அழித்து விடும். இவ்வித பிரயோகங்களுக்கு பலவிதங்க ளில் மாற்று உண்டு. வீட்டில் துளசிச் செடி வளர்ப் பதாலும்; தொட்டால் சிணுங்கி, நாயுருவி, நத்தைச் சூரி போன்றவற்றின் வேரால் வலம் பிரி, இடம் பிரி, ஜோதி விருட்சம், அழுகண்ணி, தொழுகண்ணி, ஆல்விரட்டி, ஆல்மடக்கி, யானை வணங்கி போன்ற வேர்களின் உதவி யுடனும்; வீட்டில் நரசிம்ம, சுதர்சன சாளக்ரமங் களை ஆராதனை செய்வதாலும் உருத்திராட்சம் தரிப்பதாலும் இந்த துஷ்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இயலும். "சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று அறிய வேண்டும். அதேபோன்று விஷ்ணு சொரூபமான சாளக்கிரம மூர்த்தி வீட்டில் இருக்கும்போது துஷ்ட சக்திகள் வேலை செய்யாது.
இதைத் தவிர கடுமையான செய்வினை, ஏவல் போன்றவற்றிற்கு பிரத்தியங்கிரா தேவி, சூலினி துர்க்கை, சரபேஸ்வர மூர்த்தி, உக்கிர நரசிம்மர், யோக அனுமன் போன்ற தெய்வங் களின் வழிபாடுகள், யந்திர பூஜைகள் போன்றவை செய்வினைகளைக் கட்டாயம் விலக்க உதவும். இதில் சரியாக எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தால் போதும்
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment