Tuesday, 1 August 2017

காசி கயிறு !!!

காசி கயிறு !!!
காசிப் பட்டணத்துக்கே காலபைரவர்தான் காவல்காரர்.


காசியில் காலத்துக்குஅதிபதியான காலபைரவர் சக்தி உள்ளவர்.இவரை
வழிபட எதிரிகளின் தொல்லை விலகும். " ஸ்ரீ காலபைரவரை வணங்கு;
காசி கயிற்றை கட்டு." என்பார்கள். காசிக்குச் சென்று ஸ்ரீ காலபைரவரை
தரிசிக்க இயலாதவர்கள்கூட அங்கிருந்துபிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசிக் கயிற்றை மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால்
கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்.
இவரை வணங்கிய பின் கையில் காசிக் கயிறு என்ற கருப்பு நிறக் கைறை கட்ட வேண்டும். கருப்பு கயிறு உடல் நலத்திருக்கும், வாழ்க்கை வளத்திருக்கும் காப்பாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
காசிக்கு போவதே பாவத்தைத் தொலைக்காதன். அந்த பாவங்களை
கரிய இருளுக்கு ஒப்பிட்டு, நம் வலது கை மணிக்கட்டில் கருப்பு கயிறு
கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றில் ஐந்து முடிச்சுக்கள் இருக்கும்.
ஆணவம், பொறாமை, ஆசை,காமம், உடல் நிலையானது என்ற
எண்ணமாகிய மாயை ஆகியவற்றை அந்த முடிச்சுக்கள் குறிக்கின்றன.
இந்த கயிற்றால் ஏற்படும் பலன்கள்:;-
1 பயத்தை போக்கும்.
2. தைரியும் தரும்.
3. கர்ம வினைகளை அழிக்கும்.
4. விபத்துகளிருந்து காக்கும்.
5. ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போக்கும்.
6.நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்.
7. தீய கனவுகளை தோன்றாமல் செய்யும்.
8. கடன்கள் தீர்க்கும்.
9. பைரவர் அருளை பெருக்கும்.
கோயில்களில் தரும் கயிற்றை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம் ???
காசி, திருப்பதி போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறுகையில் கட்டப்படுகிறது.
இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள்.
அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment