பரிகாரங்கள் செய்வது எப்படி?
எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை. தன்னால் முடியக்கூடியது எதுவும் இல்லை, நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும் தருணத்தில்தான், அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது. நான், தான் என்னும் அகம்பாவம் அழியும்போதுதான் இறைவனை நினைக்க தோன்றும்.
உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால், அந்த தொகையை ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சினை இல்லை. எப்பொழுது அந்த பெரிய டாக்டரும் கையை விரித்து விடுவாரோ, அல்லது அந்த தொகை ஏற்பாடு செய்ய முடியவில்லையோ, அப்பொழுது மாட்டிக் கொள்வது கடவுளும், ஜோதிடர்களும்.
ஆறாம் இடம் - ருண, ரோக, சத்ரு ஸ்தானம். அதாவது கடன், நோய், எதிரியைக் குறிக்கும். அந்த இடத்தின் அதிபதி பலவீனமாக இருந்தாலோ , அல்லது அந்த வீடு பாவ கிரகங்களின் பார்வையிலோ, சேர்க்கையிலோ இருந்தால், அந்த இடத்தின் அதிபதியின் தசை நடந்தால், அவர் கடன் அல்லது நோயினால் பாதிக்கப்படுகிறார்.
பரிகாரம் செய்யும் அன்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது நல்ல மழை பெய்யும் நேரத்தில் கையில் ஒரு குடையுன் பாதுகாப்பாக செல்வதற்கு ஒப்பானது மட்டுமே. மழை அதிகமாகப் பெய்தால், குடை இருந்தும் , நீங்கள் நனையத்தான் வேண்டி இருக்கும். நமக்கு கிடைக்கும் துன்பங்கள், நமது கர்ம வினைக்கு ஏற்ப, இந்த ஜென்மத்தில் திரும்பக் கிடைக்கும். பரிகாரங்கள் அதன் தாக்கத்தை, கடுமையை ஓரளவுக்கு குறைக்கச் செய்யும். அவ்வளவுதான். காலம் முழுக்க அநியாயங்கள் செய்துவிட்டு பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? என்று கேட்டால், இது பொருத்தமாக தோன்றவில்லை.
பரிகாரம், ஹோமம் , யாகம், அன்னதானம் ஆகியவை அந்த தேவதையின் முழு ஆசிர்வாதம் கிடைக்கச் செய்யப்படுவது. பரிகாரம் செய்ய விரும்பும் அன்பர்கள் அங்கு சென்று தங்கள் பராக்கிரமத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது. மேலும் எந்த ஒரு பரிகாரம் செய்ய விரும்பினாலும், பரிகாரம் செய்ய விருக்கும் தினத்திற்கு முன், குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விரதமிருந்து , உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து, இருவேளை நீராடி, அந்த தெய்வத்தை மனமுருக வேண்டி பின் பொருத்தமான நாளில் அந்த ஸ்தலத்துக்கு சென்று இறைவனை மனமார தொழுது, குறிப்பட்ட தொல்லைகளில் இருந்து விடுவிக்க வேண்டி வழிபடவேண்டும். அபிஷேகம், அர்ச்சனை, வாய்ப்பு இருந்ததால் அங்க பிரதஷ்ணம் செய்வது ஆகியவை இன்னும் நல்லது. (சபரி மலைக்கு மாலை அணிபவர்கள் இருப்பதை போல).
உடல் நலம் மிக குன்றியவர்கள்- விரதம் இருக்க இயலாதவர்கள், மனதளவில் முடிந்தவரை நாம ஜபம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்து முடித்த பிறகும், பிறருக்கு தெரியாமல் இருந்தால் கூட, நம் மனதை உறுத்தும் தவறுகளை மீண்டும் செய்யாமல் , சுயக்கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம். அது உங்கள் சந்ததியினருக்கு நல்லது.
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
No comments:
Post a Comment